வணக்கம் இது வியாழன் கவிதை நேரம் .
இல.527
இசை
********
தூங்கிடும் உள்ளங்களைத், தட்டியே எழுப்பும்.
துடிக்கின்ற இதயத்திற்குத் ,தூண்டு கோலாக இருக்கும்.
தேம்பி அழும் குழந்தைக்குத், தேன்பாகுபோல இனிக்கும்.
தெவிட்டிடும் வார்த்தைகளுக்குச்,சுவையூட்டும் லட்டு ஆகும்.
தொலைந்த நினைவுகளைத், தூண்டில் போட்டு இழுக்க வைக்கும்.
தீராத வலிகளையும், தன் வீராப்பால் தணிய வைக்கும்.
ஆடாத தலைகளையும் , தனை அறியாது அசைய வைக்கும்.
ஆடுகின்ற தலைக்கிசைவாய், அடித்தொடையில் , தாளமும் போடும் .
இசை….இசை
பொன்.தர்மா