வியாழன் கவிதை

பெண்கள் எழிற்சி

ரஜனி அன்ரன்

“ பெண்கள் எழிற்சி “ கவி…ரஜனி அன்ரன் (B.A) 10.10.2024

உயிரின் தோற்றத்திற்கும்
வாழ்விற்கும் வளர்ச்சிக்கும்
முதன்மையாவள் என்றும் பெண்ணே
பெண்ணின் எழிற்சிக்காய் மண்ணின் மலர்விற்காய்
களமாடிச் சமராடி நஞ்சினை உண்டு
வித்தாகிய முதல் மறவர் குலப்பெண்ணாம்
மாலதியின் நாளாம் அக்டோபர் பத்தாம் நாளே
ஈழப்பெண்கள் எழிற்சித் தினமாச்சு !

எழிற்சியின் வித்தாக
புதுயுகப் பெண்ணாக
புதிய சரிதம் எழுதிய
புதுமைப் பெண்ணாம் மாலதி
விடியல் பாதைக்கு வழிகாட்டி
வரையறை ஒன்றை வரலாறாக்கினாளே !

இன்று அரசியல் சமூகம் பொருளாதாரம்
அறிவியல் இலக்கியம் மருத்துவம் சட்டமென
அத்தனை துறைகளிலும் பெண்ணினம் அபார வளர்ச்சி
இனத்தின் விடியலுக்கான முதற்படியே பெண்ணின் எழிற்சி
தொட்டில் ஆட்டிய கையே இன்று உலகை ஆழும் கை
பெண்கள் எழிற்சியே புரட்சியின் வெற்றி
பெண்கள் எழிற்சியே சமூகத்தின் வளர்ச்சி !