புனிதா கரன்
கவிதை 05
நவின உலகிலே
நாகரிக மோகமே//
அச் சுறுத்துதே
தொழிநுட்ப வளர்ச்சி//
உயிரைக் குடித்திடும்
கொடிய நோய்களே//
வையகமெங்கும் பரவியே
வாழ்வை பயமுறுத்துதே//
கவலை வாட்டும்
கொடிய நேரத்திலே//
உயிர்நேயம் மாந்தனிடம்
ஊமையானது ஏனோ??//
நம்முன்னோர் போதித்த
நற்சிந்தனைகள் எங்கே??//
காற்றிலே பறக்க
கடமை தவறினோமே//
ஆபத்தைக் கண்டு
உதவிட உள்ளம்//
புகைப்படம் எடுத்து
முகநூலில் பதிவிடுதே//
மனதில் சிறிதும்
ஈரம் இன்றியே//
எளியோரை வதைத்து
ஏற்றம் கண்டிடும்//
வலிமை படைத்த
வல்லரசும் உண்டே//
அமைதியாய் அகிலம்
அனுதினம் சுற்றிட//
அன்பால் இணைந்தே
அறவழியில் நடந்திடு//
புனிதா கரன்
கவிதை 05
UK