வியாழன் கவிதை

புத்தாண்டே வருக! வருக!

நகுலா சிவநாதன்

புத்தாண்டே வருக! வருக!

புத்தாண்டுப் பெண்ணே வருக வருக!
புதுயுகம் படைக்க வருக!
வித்தாக விளைநிலம் பெருக வருக
விளைவாக நற்பயிர் செழிக்க வருக!

முத்தாக நல்வாழ்க்கை என்றும் மலர்க
முனைப்பாக நல்லேற்றம் என்றும் உயர்க!
கொத்தாக புன்னகை என்றும் மிளிர
கொலுவாக நல்லாட்சி என்றும் மலர்க!

வருக! வருக! புத்தாண்டே
வளங்கள் நிறைக்க வருக
வருவாய் உயர் வருக
தருவாய் நலன்கள் செழிக்க வருக!

நகுலா சிவநாதன் 1793