கவிதை நேரம்-19.12.2024
கவி இலக்கம்-1968
பிறப்பின் புதுமை
——————-
மண்ணிலே புதுமை நடந்தது உண்மை
விண்ணிலே பாலன் விடி வெள்ளியானது நன்மை
தேவனின் மாண்பில் கருவானார் உண்மை
அன்னை மரியாள் மடிதனில் தவழ்ந்தது மேன்மை
கொட்டிடும் பனியில் பாலகனின் சத்தம்
மாட்டு தொழுவமதில் பிறப்பின் சித்தம்
வானவர் புடை சூழ நின்றது நாட்டம்
இன்னிசை பாடியவர் இடையர் கூட்டம்
வானவர் தோழமையில் வாழ்த்திய மழலை
ஆயர்கள் கூட்டம் போற்றிய மகிமை
ஞானிகள் கூடி வாழ்த்திய குழந்தை
அதுவே இயேசு பாலனின் பிறப்பு வருகை
உலகில் துன்பம் போக்கவே பிறப்பாய்
மனிதம் மலர்ந்திட வருவாய் நிறைவாய்
உத்தமனாய் பிறப்பீர் தேவனே எமக்காய்
புனிதம் நிலைத்திட புண்ணியவனாய்