சந்தம் சிந்தும் கவிதை

பாலதேவகஜன்

கவியழகு

கடந்துவிட முடியாத
கால இனிமைகளை
கரிக்கிப்போட துடிக்கும்
கடுமையான வலிகளை
கடத்திச்சென்ற கவியழகே!

உன் புகழ் பாட
உன்னையே அழைக்கிறேன்
உட்கார்ந்து இருந்தபடி
உனக்குள்ளே மூழ்கின்றேன்

கற்பனை தூண்டலும்
ஒப்பனை சாயலும்
ஒன்றிக் கொண்டிட
ஒற்றை காகித்த்தில் பிறந்தவளே!

ஒப்பற்ற உன் புகழை
வரிகளுக்குள் புகுத்தி
இசையோடு உனை மீட்ட
இன்பம் காணுமே உலகு!

வலிகளுக்கு மருந்தானாய்
வலிமைக்கு உரமானாய்
வாழ்க்கைக்கு பாடமானாய்
எனக்கே நீ! உலகமானாய்.

காதலுக்கு தூதுவனாய்
காத்திருப்புக்கு சேவகனாய்
கண்ணீருக்கு ஆறுதலாய்
கருமாரிக்கு காவியமாய்

கலைகளுக்குள் உயர்வாய்
கற்பனைக்கு பரிசாய்
வாழ்த்துக்கு முதலாய்
வந்தவளே என் கவியழகே!

உன் அழகில் மயங்கி
உன் அர்த்தத்தில் கிறங்கி
உனை மீண்டும் மீண்டும்
அழைக்கின்றேன் கவியழகே!

எனக்கான ஆறுதலும் நீயே!
எனக்கான அங்கிகாரமும் நீயே!
உனை அழைத்தபடியே
என்றைக்கும் நான் இருப்பேன்
என் கவியழகே!