வெற்றிப்பயணம்
கட்டளை பிறப்புக்காய்
காத்திருப்போம்.
கடும் பயிற்சகள் யாவிலும்
கலந்திருப்போம்.
இலக்கு என்ற ஒன்றை மட்டும்
இடைவிடாது நினைத்திருப்போம்
இரவு பகல் பார்க்காமல்
ஈழத்தாயை காத்து நின்றோம்.
வண்ணமாய் நீங்கள்
வாழ்ந்திடவே
திண்ணமாய் நாங்கள்
நின்றிருந்தோம்.
மண்ணையும் மக்களையும்
காத்திடவே எங்கள்
உடலையும் உயிரையும்
அர்ப்பணித்தோம்.
வேதனை கண்களில்
நிறைந்திருந்தும்
விடுதலை பெற்றிடவே
விழித்து நின்றோம்.
உலகமே பதறும்
பலத்துடனே இருந்தோம்
உன்னத வேள்விக்குள்
மூள்கியே கிடந்தோம்.
சமபலம் என்ற நிலையோடு
சமாதனத்துக்குள் நுழைந்தோம்
இது தந்திரோபாய நகர்வென்று
எண்ணிடாதே இருந்தோம்.
துரோகங்களால் நெருங்காதென்ற
நெஞ்சுரத்துடனே இருந்தோம்
துரோகங்களால் வீழும்
நிலைக்குள்ளே நின்றோம்.
வெற்றி பயணங்களையே
தொடர்ந்திட்ட எமக்கு
துரோகம் தந்த வலிகளால்
தளரும் நிலைக்கே சென்றோம்.