தேர்தல்
வருவதும் போவதும்
வலுத்தவன் வெல்லவதும்
வழமையே அன்றி
வருத்தம் என்றுமே நம்மினத்திற்கே
வாக்குறுதிகளை அள்ளி தெளித்து
வாக்குகளை அடைய நினைக்கும்
வங்குரோத்து அரசியல் வாதிகளே!
வாருங்கள் இது உங்கள் காலம்.
நம்பி நம்பி ஏமாந்து
சலுகைகளுக்கு விலைபோகும்
சாமானிய மக்களே! நீங்கள்
கொஞ்சம் விழித்துக்கொள்ளுங்கள்.
மாற்றம் என்பது உங்கள் கையில்
நாற்றம் பிடித்த அரசியல்வாதிகளை
நசுக்கி எறியுங்கள்
நாட்டை வளமாக்குங்கள்.
நம்மினத்தை காப்பேன்
நன்மைகளையே செய்வேன்
என்ற நயவஞ்சக பேச்சை நம்பி
வாழ்வை தொலைத்து விடாதீர்கள்
பிணம்தின்னும் களுகு அவர்கள்
வாக்கு பெறும்வரை வட்டமிடுவார்கள்
வெற்றி பெற்றதும்
நமக்கு நாமம் இடுவார்கள்.
உணவு உடை உறைவிடம்
உடன் தீர்வு தருவோம்
வட்டியில்லா கடன் தருவோம்
வாகன வரி நீக்குஙவோம்
எங்கள் சின்னத்தில்
உங்கள் புள்ளடி
உங்கள் எண்ணத்தில்
நாங்கள் செருப்படி
என்ற அரசியல் வாதிகளின்
உண்மை தன்மைகள்
உணராத வரையில்
ஏமாற்றம் என்றும் நமக்கே.