சந்தம் சிந்தும் கவிதை

பாலதேவகஜன்

பருவம்

புருவம் வியந்த
உருவ அழகே! என்
பருவம் அழைக்குது
பருகிட உனையே.

மாறும் பருவம்
மெருகும் அழகு
சேரும் கனவில்
அருப்பும் என் காதல்

உனையே விரும்பும்
உலகினில் நானே!
உருகி உருகி என்
காதலை வளர்த்தேன்.

அருகில் கிடக்கும்
எத்தனையோ இன்பம்
அத்தனையும் மறக்கும்
உன் நினைப்பின் இனிமை.

பருவங்கள் ஒவ்வொன்றையும்
தோல்வியின்றியே கடந்தேன்
உன்னை சுமந்த பருவத்தில்
தோல்வியின் விழிம்பிலே துவள்ந்தேன்.

கைகூடும் உன் காதலுக்காய்
கைகூப்பாத கோவிலில்லை
மெய் அன்போடு நான்!
பொய் அன்போடு நீ!

பொல்லாத காலமோ!
என்னை புகுத்தியது உன்னில்
வெகுளியாய் என்னை
நினைத்தாயோ நீ!

உன் நினைப்பு எதுவானாலும்
என் நினைப்பெல்லாம் நீயே!
உண்மை ஓர் நாள் உணர்வாய்
என் தன்மை நீயாய் உணர்வாய்

நீ! உணரும் காலம்
என் பருவமே மாறும்
உன் உருவம் சுமந்து
என் நெஞ்சமே வாழும்.

வேறெரு உருவை
விதையேன் என் நெஞ்சில்
உயிர்விடும் காலமும்
உன் நினைப்பே போதும்.

வாழும் வாழ்வு ஒருமுறையே
அந்த வாழ்வும் எனக்கு வாய்க்கவில்லை
துரோகங்கள் தந்த தோல்விகளே
என்னை சூழ்ந்து கிடக்குது பாருங்களே

பற்றுவைத்த மண்ணும்
பாசம்வைத்த பெண்ணும்
என்னோடு சேர்ந்ததுமில்லை
இனி சேரப்போவதுமில்லை

என் விதியின் கணக்கிற்காய்
வாழ்வு முடியும்வரை
வலிந்த நினைவகளோடு
வலித்தே வாழ்வேன்.