சந்தம் சிந்தும் கவிதை

பாலதேவகஜன்

பெண்ணே!

எண்ணமெல்லாம் நிறைந்தவள்
எனதுயிரில் கலந்தவள்
வண்ணமான வாழ்வுக்குள்
என்னையே அழைத்தவள்.

வாலிபம் அத்தனையும்
வைதூரியமாய் ஜொலித்தவள்
வாழவே! அவளென்ற
வைராக்கியத்தை தந்தவள்.

காதல் மேவலுக்குள்
கண்ணியமாய் இருந்தவள்
கால மோகத்தினில்
களன்றே சென்றவள்.

வரட்சியில் நிற்கும் மரமாய்
வெறுமையானது என் வாழ்வு
புரட்சி செய்து பலனும் இல்லை
புரட்டிப் பார்க்க பலமும் இல்லை.

இடர்பட்டு நிற்பதற்கா
இனிமைகளை தந்தாளோ!
இனியென்ன வாழ்வென்ற
வெறுப்புக்குள் நின்றேனே.

காதல் மயக்கத்தில் அவள்
கபடம் உணராமல்
காதல் அவளென்ற
கண்ணியத்தை காத்தேனே!

எண்ணி எண்ணி அழுகின்றேன்
ஏமாந்ததற்காக அல்ல
என்னை பிரிந்து அவள்
எப்படி வாழ்வாளோ என்று.

ஒன்றாய் திரிந்த நினைவுகள்
ஓயாத அலைகளாய்
ஒன்றாய் வாழ்வோமென்ற கனவுகள்
ஓய்வெடுக்கும் நிலைகளாய்.

புரியாது பிரிந்தவள்
புரியும் காலத்தில்
தெரியாத உலகில் நான்
உரிகியே கிடப்பேன்
அவள் நினைப்போடு.