வியாழன் கவிதை

பண்டிகை வந்தாலே

நேவிஸ் பிலிப் கவி இல (349) 31/10/24

ஆண்டுக்கு ஆண்டு
தேதிக்குத் தேதி
வந்து வந்து போகுது
பண்டிகைகைகள்

வாடிக்கையாய் வேடிக்கையாய்
பட்டாடையும் புத்தாடையும்
சரசரக்கும்
பட்டாசும் மத்தாப்பும்
தூள்பறக்கும்

வீதியெங்கும் மின் விளக்கு
மினு மினுக்க
விண் பிளக்கும் வான வேடிக்கை
விந்தைகள் காட்டி நிற்கும்

சமயங்களும் சடங்குகளும் ஓரமாக
உணவுகளும் விருந்துகளும் ஏராளமாய்
நாவிலே தின்பண்டங்களின் இன்சுவை
உள்ளத்திலோ இனம் புரியா வெறுமை

தன்னல வேரை அறுத்தெறிவோம்
நல் எண்ண முடன் தீப விளக்கேற்றிடுவோம்
எரியாத அடுப்புகளும் எரிந்திடணும்
ஒட்டிய வயிறுகளும் நிரம்பிடணும்
துன்பங்கள் மறைந்து இன்பங்கள் மலர்தலே
மகிழ்வான பண்டிகையாம்
தீப ஒளித் திருநாள் நல் வாழ்த்துக்கள்
நன்றி வணக்கம்.