பண்டிகை வந்தாலே
பல நினைவுகளின் தொடரலைகள்
சிறுகைகள் பல கூடி- அன்று
சிந்து பாடி மகிழ் பரவசங்கள்
அச்சில் அடித்த துணி-நம்
அத்தனை உடலுக்கும் அழகாக
பொத்தி வார்த்தபடி -அம்மா
பிரித்திழைந்த ஞாபகங்கள்
பல வீட்டு பல காரம் -நாம்
பகிர்ந்துண்டு மகிழ்ந்தெழுந்த
கிராமத்து அன்பிழையில்
கோர்த்தெழுந்த கோலங்கள்
அத்தனையும் தொலைந்ததங்கு
வறுமைக்குள் வாழ்வாச்சு அன்பை
தொலைத்திங்கே உறவு வலை
பணத்தட்டில் வெறும் பவிசாச்சு
அழகின் நினைவலைக்குள் நிறைந்தவர்கள்
தொலைந்த நிழல்பலர் வீட்டில்
உயிர்க்கூடு சுமக்கும்இந்த
உறவுகட்கு பண்டிகையின் நினைவே
சுவடுகள் தாம்