வியாழன் கவிதை

பண்டிகை வந்தாலே

இ.உருத்திரேஸ்வரன்

பண்டிகை வந்தாலே கொண்டாட்டம்
அன்றைய நாளிலே ஊரில்
ஆனால் இன்றோ அன்று போல்
இல்லாமல் உள்ளது குறைவாக

சிறுவர்களுக்கு கூட விருப்பமின்றி
போனது காலத்தின் மாற்றமா
குறைவான வருமானமா
புரியாத நிலையில் நாமும்

கைத்தொலைபேசி அழைப்புக்கள்
புலனம் வைபர் இவைகளினால்
நிரமௌம் பண்டிகையே ஒழிய
பழைய கொண்டாட்டம் இல்லையே இங்கு

இயேசு பிறப்பு பூசணி ஒளிவிழா
போன்ற பண்டிகைகள் இங்கு
இளையோராலும் மகிழ்வாகவும்
கொண்டாடப்படுகிறது சிறப்பாக இங்கு

நன்றி
வணக்கம்