வியாழன் கவிதை

பண்டிகை என்றாலே

ஜெயம் தங்கராஜா

கவி 747

பண்டிகை என்றாலே

பண்டிகை என்றாலே இனம்புரியா குதூகலம்
பண்டிகை என்றாலே உற்சாகம் கூடுகட்டும்
பண்டிகை என்றாலே புத்தாடைகளின் புதுவரவு
பண்டிகையென்றாலே விதம்விதமான தின்பண்டங்களின் படையெடுப்பு

நம் கலாசாரத்தோடு பின்னிப்பிணைந்த ஒன்று
நம் பண்பாட்டுடன் ஒட்டியுறவாடிய ஒன்று
உறவுகளை நட்புதனை வளர்த்துவிட காரணமாயிது
வாழ்த்துதனை பரிமாறிக்கொள்வதற்கு அமைக்கும் வாய்பையிது

மகிழ்வை அடிபடையாகக்கொண்டு நடத்தப்படும் திருநாள்
பாரம்பரியத்தைக் காத்துநிற்கும் பரம்பரையின் பெருநாள்
முன்னோர்கள் கடைப்பிடித்த பழக்கங்களின் மேன்மையிது
தலைமுறையும் மதித்ததனை கொண்டாடத் தேவையது

கால சூழ்நிலை புதியவற்றை திணிக்கலாம்
காரணஞ்சொல்லி மாற்றக்கூடாததையும் மாற்ற முயற்சிக்கலாம்
வீண் செலவு ஆடம்பரம் எனக்கூறலாம்
பண்டிகைகளின் வேர்களறிந்தவர்கள் இரசிப்போடு கொண்டாடலாமே

ஜெயம்
30-10-2024