கவி இல (70). 25/08/22
தேடும் விழிகளுக்குள்
தேங்கிய வலி
உறவுகளைத் தேடித் திரிந்து
ஊரெல்லாம் ஓடியலைந்து
அன்பைத் தேடி அநாதையாகி
வழி பார்த்துக் கண்கள் நீர் கோர்த்து நிற்க
விழி மூடினால் விதி தெரியுது
விழுத்தெழுந்தால் அதன் வலி தெரியுது
விழி மூடி வலி மறக்க ஏது வழி
வேதனையின் விளிம்பில் அங்கலாய்க்குது இதயம்
வருந்தித் தினமும் அழுவதே வாழ்க்கையாக
தேடும் விழிகளில் தேங்கிய வலிகள்
துயர் தொலைக்க அழலாமென்றால்
கண்களிரண்டும் பாலை வனமாய்
ஆண்டுகள் பல கடந்த நிலை
தமிழர் தலை எழுத்தில் மாற்றமில்லை
கண்டு கொள்வோர் யாருமில்லை
இழப்புக்களின் வடுக்களும் மாறவில்லை
வலியோடு நினைவுகள் இதயத்தைக் குத்த
ஆறாய்க் கண்ணீர் விழி வழி பெருக
ஏங்கிக் குமுறுது நெஞ்சம்
தொலைந்தவர் வருவாரோ?
கவலைகள் மறைந்திடுமோ??