18/8/22
கவி இல( 69)
கோர வெப்பம்
அழியாத ஓவியமாம்இயற்கையினை
சீரழித்தான் ஆறறிவழிந்த மனிதன்
பொறுமை காக்கும் நில மகளும்
கொதிக்கின்றாள் சீற்றமுடன்
பூமியெங்கும் கடும் வெப்பம
தவழ்ந்து வரும் தென்றல் காற்றும்
அனலாய் கொதித்திடவே
வெப்பம் தாங்கா மக்கள் தினமும் தவித்திடவே
நீர் நிலைகள் வற்றிப் போச்சு
பயிர் பச்சையும் வாடிப் போச்சு
தாகம் தீர்க்க தண்ணீரின்றி
மாக்களெல்லாம் மடியுதிங்கே
குழாய் தண்ணீரும் வாரா நிலை
குடி நீருக்காய் மக்கள் தவிக்க
காய்ந்து வெடித்த நிலங்களிலே
பசுமைகள் கருகலாச்சு
பெரு மரக் காடுகளும்
காட்டுத் தீயால் பற்றி எரிய
ஊருக்குள்ளும் பரவிய தீயால்
தற்காப்பாய் மக்கள் வேறிடம் நாட
கரு மேகமே வான் முகிலே
பெரு மழையாய் நீ பொழியாயோ
இறைவா உம் கருணையின்றி இவ்விடர்
தீர்த்திடுவார் யாருளரோ?