வியாழன் கவிதை

நேவிஸ் பிலிப்

கவி இல(82) 16/11/22
நினைவுகள்
கடந்த காலத்தினை
உணர்வுகளாய் நினைவுகளாய்
மறக்க முடியாமல் தவிக்குது
மனித மனம்

திரும்ப பெற முடியா
அழகிய நினைவுகள்
நிகரில்லாக் காட்சிகளாய்
இள வயது ஞாபகங்கள்

மறக்க இயலா நினைவுகளை
மீண்டும் நினைக்குது உண்மை அன்பு
முகவரி இன்றி முடிந்து போன
உறவைத் தேடுது நம் நினைவு

காலம் கடந்தாலும்
நினைவுகள் என்றும் அழிவதில்லை
கடந்த கால நினைவுகளே
நம் வாழ்வின் வசந்த காலம்

சொந்தங்கள் என்றும் தொடர் கதையாய்
மீண்டும் எம்மோடு தொடர்ந்து வர
பல்லாண்டு வாழ்க வாழ்கவென
வாழத்துகின்றேன் இந்நாளில்