என்று தீரும்
காணாமல் போனதால்
நீங்கள் தேடப்படும்
உறவுகளாக உள்ளீர்கள்
மனதில் என்றும்
அழியாத நினைவுகளை
தந்து விட்டு எங்கு
சென்றீர்கள்
பெற்றவர்களும்
பிள்ளைகளும்
உடன் பிறந்தவர்களும்
கடைசிவரை கண்ணீரிலேயா
தேடப்படும் உறவுகளை
கடைசிவரை
தேடிக்கொண்டிருப்பதா
நம்நிலை
வரிகள்
நிலைக்சனா திலீப்குமார்.