கவி 746
நாம் பொம்மைகள் மட்டுமே
ஆடிப்பாடும் இந்த உடலும் எமதில்லை
ஓடித் துடிக்கும் ஆவியும் எமதில்லை
கூடுவிட்டு ஆவிபோயின் பெயரும் பிணம்
காடுகொண்டே எரித்துவிடும் கூடவிருந்த சனம்
நித்திய வாழ்கையென்று எண்ணியது பொய்யானது
அத்தினம் வந்தால் ஓய்வென்பது மெய்யானது
வந்தவரெல்லாம் தங்கிட வேண்டியே ஆசை
தந்திரங்கொண்ட விதியோ ஒருநாள் நடத்திடும் பூசை
விலையுயர்ந்த வசந்த மாளிகை இங்கே
மலைபோல் குவித்த காசுபணம் அங்கே
பாரிவரை கயிறறாத வாழ்க்கையென்று ஆட்டம்பாட்டம்
ஓரிரவில் ஓடிவிடுமந்த உயிரைவைத்து ஆர்ப்பாட்டம்
சோம்பலை முறித்து அனுதின ஓட்டம்
சாம்பலாய்ப் போகும் ஐந்தடியின் ஆட்டம்
பூக்களாய் பூத்தும் வாடாதெனும் கருவம்
தீக்குளிக்கும் நாளதை அறியாத உருவம்
வாடகை வீட்டில் எத்தனை காலம்
நாடகம் இன்னும் எதுவரை நீளும்
என்பது யாருக்கு எவருக்குத் தெரியும்
மண்ணாலான பொம்மைகளை செய்தவருக்கே புரியும்
ஜெயம்
23-10-2024