சந்தம் சிந்தும் கவிதை

நாகேஸ்வரன் மீசாலை

*…கண்விழி கெட்ட கனவாகட்டும்*..?? *

தாயை தாய் மண்ணை விட்டு
கதறிப் பதறி கட்டுநாயக்கா வந்து
கண்டபடி வெளிக்கிட்டு
கண்டங்கள் வந்தடைந்து
பட்ட கடனை அடைத்து
கரை சேரா கரை சேர்த்து
தொட்ட குறை பட்ட குறை …பார்த்துப் பார்த்து ஒப்பேற்றி
பெருமூச்சு நிக்கமுன்னே தேவைக்கும் தகுதிக்கும் மீறி
கண்டவைக்கும் ஆசைப்பட்டு
ஆசைக்கு இரண்டாய் மூன்றாய்
கண்ட கண்ட வேலைகளை
தேடித் தேடி ஓட வாகனமும்
குத்தகைக்கு குத்தைக்கு குறை
உண்டோ கொடுக்கிறவன் இருக்கையில் வெறும் கையும்…..?

வீடு வீடென இருக்கவொரு வீடு
குந்தியிருக்க நேரமில்லை
குந்தி இருந்தால் குந்தகமே
வங்கிக்காரன் குத்தகைக்கு
குடும்பமே திண்டாட்டம்
திண்டாட்டம் நிக்க முன்னே
ஆசைக்கு ஊரிலொரு வீடு
குடும்பமாக போகாவிடினும்
தனியாய் போய் படுத்துறங்க
ஊரிலே வோச்சர் விளக்கேற்ற
ஊர் பார்க்கப் பேச ஊரிலும் வீடு
வோச்சருக்கும் உழைக்கனும்
ஓடி ஓடியே ஓடாய் தேய்ந்த பின்னர் தவமாய் தவமிருந்து
பெற்றதுகள் எல்லாம்
அங்குமிங்கும் தன்பாட்டிலே
தம் சார்ந்து தம் வாழ்க்கை
ஆண்டுகள் தாண்டியே
வெறுமையாய் ஜம்பதை தாண்டி
நோய் நொடிகள் எட்டிப்
பார்க்கையிலே படுக்கையிலே
போக முன் போதி மரத்தடி
ஞானம் பிறந்ததேனோ….?

பெற்றதுகளை விட்டு திரும்ப
பிறந்த ஊர் நோக்கிப் பறந்து
கட்டுநாயக்கா போயிறங்கி
ஊர் போய் திரும்பவும்
வெறுமையே மிச்சம்
இங்குமில்லை அங்குமில்லை
அக்கரைக்கு இக்கரைப் பச்சை
கொஞ்சம் தவறின் வெட்டுகள்
உன்மீதும் விழலாம் வில்லங்கம்
நடுநிசியில் நாய் குரைக்கையிலே
இருந்த இரத்த அழுத்தம் கூடி
மூச்செடுக்க முடியாமல்
அழுது குழரி அவசரமாய்
ஆஸ்பத்திரிக்கு விரைந்தால் விராந்தாவே வரவேற்கும்
வெளிநாட்டுக் காரனா நீ
உனக்கு கிளினிக்கில் இடமுண்டு
வைத்து வைத்து வைத்தியம் செய்ய வைத்தியர்கள் பலருண்டு
யாழ்பாணமோ மீசாலையோ
ஒரு ஊரிலும் ஒரு முகம்
தெரியாத வேற்று கிரகவாசியாய்
ஊரில் ஊறுகாய் போல் அங்கும்
இங்கும் தெரிந்தஒன்றோ இரண்டு
இதுகள் பாவத்துக்கு தன்னும்
பார்க்காதுகள் பக்கத்தில்
பாய்படுக்கையில் கிடக்கையில்
நல்லதண்ணியும் வெறுஞ் சோறு
தன்னும் யார் தருவார் அச்சோவே

நா வறண்டு நக்குத் தண்ணியும்
இன்றி பறந்து பரிதவிக்காமல்
உழைத்தவற்றில் உனக்கு வைத்து
பெற்றவைகளுக்கு புத்திமதி கூறு
அவர்கள் கேட்காவிடின் உன்விதி
கெட்டுப் போக நாறிப் போக வெள்ளைக் காரன் விட மாட்டான்

இங்கேயும் கோயில் உண்டு
குளம் உண்டு தேர் உண்டு தீர்த்தம் உண்டு அளவிற்கு மீறிய அன்னதானம் கூடிக்குலவ கூட்டம் உண்டு அதை தேடு எம்மவர் வயோதிபர் இல்லங்கள் இல்லலை வயோதிபர் இல்லங்களில் எம்மவர்கள்சேர் சேர் சேர்ந்தே இரு !

கட்டுநாயக்கா கடந்த போதே நீ நினைப்பவை நிஜயமல்ல நிரூபணமாகிப் போன உண்மை உணராதவர்கள் இன்றும் கட்டுநாயக்காவில் பறப்பதற்கு..?

இனி எப்படி நினைத்தாலும் நினைத்தவை நினைத்த போல்நடக்கா நடக்க சாத்தியமில்லை உன்னை குழப்பி உன் துணையை குழப்பி பெற்றதுகளை குழப்பி இறுதி நாட்களை நரகமாக்காதே !

கோடிகள் கொட்டிக் கொடுத்தும்
வேண்டாத தெய்வங்கள் வேண்டியும் உலகில் உன் வாழ்க்கை கிடைக்காதோர் கோடியில் கோடிஉனக்கு இவ் வாழ்வு கிடைத்ததில் ஆயிரம் சூட்சுமங்கள் அடங்கியுள
ஊர் ஊர் என உன்னுயிர் உள்ள
போதே ஊருக்கு நல்லதையே செய் செயவதற்கு மனிதம்88
போல் அமைப்பைகள் பல உள
நற்கல்வியும் நன்பண்பும் புகட்ட

நாளை நமதே மனமே மாளிகை
அடக்கமாக அடங்கப் பார்
பாவமோ புண்ணியமோ
பார் போற்ற வாழவிட்டாலும்
உன் பெற்றதுகள் பேரர்கள் போற்ற போய்ச் சேரப் பார்
மிஞ்சிப்போனால் சேர்த்த
உன் ஆஸ்தியை கீரிமலையில்
கரைக்கச் சொல்லி கெஞ்சிப்பார்
உன் கர்மாவே கரும மாற்றும்
புண்ணியம் செய்திருப்பின்
நிச்சயம் பார் நீ உன்
விருபம் போல் பிறந்த
மண்ணில் சாம்பலாய் நீ
மண்ணோடு மண்ணாய்
காற்றோடு காற்றாய் கலந்திருப்பாய் காலமெல்லலாம்
கண்விழி கட்டுநாயக்கா வருமுன்
எழுந்திரு கெட்ட கனவாய் போகட்டும் கண்விழி விழிமூடமுன் விழித்தெழு!