வியாழன் கவிதை

நகுலா சிவநாதன்

தண்ணீர்

பள்ளம் மேடு பாய்ந்து நீயும்
பாதை அமைத்து பாய்கின்றாய்
கள்ள மில்லா ஓட்டம் கண்டு
கதைகள் பேசி மகிழ்கின்றோம்
உள்ளம் எங்கு பசுமை தீட்டி
உலகம் போற்றும் வரவானாய்
வெள்ள மாகப் பாய்ந்து விட்டால்
வேரை நீயும் அழித்திடுவாய்

நாட்டின் வளத்தை நன்றாய்க் கூட்டி
நாளும் வளர்ச்சி காண்கின்றாய்
மேட்டு வயலின் செழிப்பு காண
மேன்மை நிறைத்து மேவுகின்றாய்
கூட்டும் விளைச்சல் காண மக்கள்
கூடி தண்ணீர் பாச்சுகின்றார்
நீட்டி வளரும் நெல்லும் இன்று
நீண்டு வளருது பாரீர்!

நகுலா சிவநாதன் 1739