உதிரும் இலைகளே!
உதிரம் இலைகளே! ஒருகணம் நில்லுங்கள்
உலகம் என்வென்று புரியச் சொல்கிறேன்
பழகும் காலம் பண்பாய் நடந்திடணும்
பார்ப்போர் மகிழ நடந்திடணும்
உயர்ந்த இடத்தில் இருக்கணும்
உலகம் உன்மை மதிக்கணும்
அயர்ந்து நீயும் தூங்கி விட்டால்
அவலம் நிறைந்து பெருகிடுமே
விழுகின்ற இலைகளே!
மனித வாழ்வும் இப்படித்தான்!
விழுகின்ற போது மிதிப்பார்கள்
எழுகின்ற போது நகைப்பார்கள்
விழாமல் இருத்தலே சாலச்சிறப்பு
உயர்ந்த இடத்தை தக்கவைத்திடு
ஊக்கம் கொண்டு வாழ்ந்திடு
ஆக்கம் படைத்து மகிழ்ந்திடு
அனைவர் அன்பையும் பெற்றிடு
நகுலா சிவநாதன்1737