வியாழன் கவிதை

நகுலா சிவநாதன்

சக்தி வழிபாடு

செல்வம் தருவாள் திருமகளே!
செழிக்கும் வண்ணம் அவளருளே!
கல்வி கொடுப்பாள் கலைமகளே
கனிந்து அருள்வாள் மலைமகளே!
சொல்லும் பொருளும் அணிகலனாய்
சொக்க வைப்பாள் துர்க்கைத்தாய்
வெல்லும் உலகில் வெற்றிபெற
வேண்டும் கல்வி யொடுசெல்வம்

நகுலா சிவநாதன்1735