வியாழன் கவிதை

நகுலா சிவநாதன்

கம்பன்விழா

கன்னித் தமிழ் உரைத்த கம்பன்விழா
கனிவாய் மனத்தில் பதிந்த விழா
அன்னைத் தமிழின் அமுத விழா
ஆனந்தம் தந்த அற்புத விழா

கவியரங்கு கண்ட பெருவிழா
புவியதனில் புடம்போட்ட நன்விழா
விருத்தங்கள் எழுத வைத்த அரங்கிலே
விந்தை ஆயிரம் விருத்தமான பெருமகிழ்வு

முத்தாய் முகிழ்த்த விழாவிலே
முனைப்பாய்ப் பாராட்டிய பாட்டரசர்
சொத்தாய் தொடுத்த ஆயிரம் விருத்தம்
சிறப்பாய் பாவலர்மணி பெற்றிட வைத்ததே

தமிழுக்கு மணிமகுடம் தந்த விழா
அணியாக மக்களும் திரண்டவேளை
மணியாகப் பட்டமும் மலர்ந்திட்டே
மங்களமாய் வாழ்த்துகளும் மனதை நிறைத்ததே!

படைப்புக்கொரு பெருமை கிடைத்தது
பாரில் மகிழ்வு துளிர்த்தது
மடை திறந்த வெள்ளமாய் விருத்தம்
தடையேதுமின்றி விரியட்டும் புதுப்பரப்பு

நகுலா சிவநாதன்1733