வியாழன் கவிதை

நகுலா சிவநாதன்

நல்லூரின் கந்தனவன்

நல்லூரின் கந்தனவன் நயமாக வருகின்றான்
அல்லல்கள் தீர்க்கின்ற அருந்தமிழின் முருகனிவன்

பல்லோர்கள் வேண்டுதலில் பற்றான கந்தனிவன்
பல்கோடி மக்களின் துன்பங்கள் துடைப்பவன்
எல்லோரும் ஏத்தி வழிபடும் கந்தன்
எம் இதயம் என்றும் இவன்தாள் பணியும்

தாய்நிலத்து உறவுகளின் வரமான கந்தனிவன்
தக்கதுணை தந்து நின்று
தரமாகக் காப்பவன்
எப்போதும் நினைக்கின்ற முருகாநீ
என்றென்றும் அருளிடுவாய் கந்தா உன் கருணையால்

தேரெறி வருகின்றாய் தேசமதில் காண்கின்றோம்
ஊரோடு மக்களை உளமார காப்பாற்று

நகுலா சிவநாதன் 1731