கொண்டாட்ட கோலங்கள்
வாழ்க்கையின் வழிமுறைகள்
வாழ்வின் வண்ணக் கோலங்கள்
தாழ்விலா வாழ்வுக்கு மகிழ்வின்
தன்னம்பிக்கை கொண்டாட்டங்கள்
தைபொங்கல் புத்தாண்டு தளிர்நடை
போட்டு வந்த கொண்டாட்ட கோலங்கள்
பகலவனின் உயிர்ரொளி பாருக்குப் பாச்சும்
பண்பாட்டு கோலங்கள் விழுமிய கொண்டாட்டம்
உறவுகளை இணைக்க
உணர்வுகளைப் பகிர்ந்திட
திறன்களை வெளிப்படுத்த
தித்திப்பாய் வாழ
கொண்டாட்ட மின்னல்கள்
கோலாக வைபவங்களே!
உழைத்த மனிதனுக்கு ஓய்வின் துளிகளும்
ஒய்யார எண்ணங்களும் களியாட்ட மனங்களும்
காசினினில் ஆட்டம் பாட்டம் ஆனந்தம்
அத்தனையும் உற்சாகம் தரும்
கொண்டாட்ட கோலங்களே!
நகுலா சிவநாதன்1646