வியாழன் கவிதை

நகுலா சிவநாதன்

பட்டாம்பூச்சி

சிறகு விரிக்கும் பட்டாம் பூச்சி
சிந்தை திறக்கும் வனப்புக்கள்
உறவைத் தேடும் அன்பு உள்ளம்
உணர்வை பகிரும் பேருள்ளம்
நிறங்கள் காட்டும் எழில் வடிவம்
நிறைந்து பெருகும் பூச்சியினம்
பறந்து செல்லும் அழகு கண்டு
பாரில் மகிழ்வு கொள்கின்றோம்

பூக்கள் தேடி பறக்கும் காட்சி
புனிதம் காணும் அன்பினிலே
பாக்கள் வடிக்க பசுமை நிறைக்க
பாதை அமைக்கும் பூச்சியினம்
பூக்கும் மலரை நாடி யினமே
புனிதத் தேனை பருகிடுமே
தாக்கம் இல்லாத் தனியி னமேநீ
தடைகள் உடைத்து பறந்திடுவாய்

வண்ண அழகு கொண்ட சாதி
வடிவம் பலதும் பெற்றிடுவாய்
எண்ண போலச் சுற்றி நீயும்
எல்லா இடமும் போவாயே
கண்ணில் உன்னைக் காணும் அழகு
களிப்பு தோன்ற வைக்கிறதே
மண்ணில் தேனை எடுத்து நீயும்
மாற்றம் காணும் அழகினமே!

நகுலா சிவநாதன்1724