வியாழன் கவிதை

நகுலா சிவநாதன்

முள்ளிவாய்க்கால் நினைவு

முப்பது ஆண்டுப் போரில் சந்தித்த இடர்கள்
இழந்த எங்கள் தமிழின உறவுகள்
எதிரியின் தாக்குதலில் எல்லாமே அழிந்தது
அழித்தது இனவெறி அரசு

முள்ளி வாய்க்கால் அவலம்
கொள்ளி வைத்த பூமியானது
அள்ளி குவித்த அப்பாவிமக்கள் உடல்கள்
தள்ளி நின்று வேடிக்கை பார்த்த அரசு

கல்லும் கரையும் கடலலையும் பொங்கும்
கண்ணீர் மல்க செங்குருதியாறு ஓடியபூமி
செந்நெல் வயல்களும் பிணவாடைகளானது
எம் தமிழீழம் எரிமலையாய் பொங்கியது

சோகத்தின் செய்தியை சொல்லியழ யாருமில்லை
வேதனையின் விழிம்புகளில் வெந்தணல்கள் பாய்ந்ததே!
கந்தகக் காற்றின் சுவாசம் அப்பாவி மக்களை அடித்துத்தான் சென்றதோ?

;அப்பாவி குழந்தைகள் பட்டினியின் விழிம்பில் சுட்டெரித்த நாட்கள்
விட்டினி நீங்குமா? விடைதான் கிடைக்குமா?
எட்டுத்திசையும் கூக்குரல் கத்தி மடிந்ததே!

மே மாதம் 18 மறந்திட முடியுமா?
முள்ளிவாய்க்கால் படுகொலை அள்ளிச் சென்ற உறவுகளை
ஆற்றிட முடியுமா? ஆறுதல் கிடைக்குமா?
மீண்டுமொரு அழிவு இனியும் தீண்ட வேண்டாம்

நகுலா சிவநாதன் 1722