உறுதியே வாழ்வு
உழலும் வாழ்வில் மனிதர்
உண்மை பேசா உத்தமர்கள்
சுழலும் சில்லாய் சுழன்று
சுத்தம் பேணா நல்லவர்கள்
நிழலும் மதிக்கா குணம்
நித்தம் வரவும் பத்திரமாய்
பழகும் குணமும் பாதியில்
பண்பு அற்றுப் பிரிகின்றனர்
அன்பு அற்ற இதயம்
அகிலம் சுற்றும் அதிசயர்கள்
இன்பம் இல்லா ஈரம்
ஈசன் கொடுத்த நல்வரங்கள்
துன்பம் போக்கும் மனமே
துணிவே போற்றும் நல்வரமாய்
என்றும் வாழ்வில் வருமோ
இறைவா நீதான் அருளிடுவாய்
கற்க வாழ்வில் நிறைவும்
கற்று உயர வழியுமுண்டு
சற்றும் கவலை வேண்டாம்
சாற்று உலகில் நிலையாக
பற்று வைத்து வாழ்ந்து
பகலும் இரவும் உழைத்து
உற்று உழலும் வாழ்வில்
உறுதி யோடு நிலைப்பாயா)
நகுலா சிவநாதன்1699