வியாழன் கவிதை

நகுலா சிவநாதன்

அச்சாணி நீயல்லவோ!

இல்லத்தின் விளக்காகி
எழுகின்ற நட்சத்திரம்
உள்ளத்தின் மகிழ்விற்காய்
உளமாரக் காத்திருப்பு

உலவுகின்ற பேரொளியே
உணர்வான பெண்மையே!
ஞானத்தின் அறிவுதனை
நாளுமாய் பெற்ற சோதியே!

பிரபஞ்ச தூணாக பைந்தமிழின் பேரோளியே!
செந்தமிழின் நறுந்தேனே!
தெவிட்டாத உன் கடமை
தேர் போன்ற வாழ்விலே
தேனான பெருவிருட்சம்

அச்சாணி நீயாக ஆளும் உலகின்
அரவணைப்புப் பெட்டகமே!
உச்சம் தொட உயர்வாய் என்றும்
ஊக்கம் படைத்து எழுவாய் நாளை!

நகுலா சிவநாதன் 1752