சந்தம் சிந்தும் கவிதை

நகுலவதி தில்லைத்தேவன்

சந்தம் சிந்தும் கவி 177.

அதிபருக்கும் பாவை அண்ணாக்கும் இரவு வணக்கம்,

பழமை.

பழயன கழிதலும்
புதியன புகுதலும்
புத்தாண்டின் வரவாம்

பாட்டியின் கதை கேட்டு
உறங்கிய நாட்களும்,
நிலா காட்டி
ஊட்டிய உணவும்,
பக்குவமாய் பத்தியம்
பாத்ததும்
கைபிடித்து பாத்த
வைத்தியமும்
மறந்திடுமா பழமையை

பைக்குள் மூட்டையாய்
குளிசையும் கையுமாய்
சாப்பிட முன்
சாப்பிட்ட பின்
உணவு மருந்தாச்சு
மருந்தே உணவாச்சு.

வசதிகள் வரவே
தொந்தி பெருத்திடவே

நடை பயிற்சியும்
எடை குறைப்பும்
நடை முறையாச்சு

மின் வெட்டு வந்தது
மா இடிப்பதும்
துலா மிதிப்பதும்
குப்பி விளக்கும்
சைக்கிள் ஓட்டுதல்
நிலாச் சோறு உண்டதும்
பழமையை நினைத்திடவேநினைத்திடவே

நன்றி