வியாழன் கவி 186.
சித்திரை
சித்திரை பெண்ணே வருக
சீரும் சிறப்பும் தருக
சித்திரமாய் வந்து இத்தரை
தொடுக
சிரிப்போடு மகிழ்வையும் தருக
ஊரெல்லாம் போராட்டம்
பாரெல்லாம் பேசுதே
விடிவு தான் கிடைக்கலையே.
பசிக்கு உணவுமில்லை
பரீச்சைக்கு பேப்பருமில்லை
நோய்க்கு மருந்துமில்லை விளக்குக்கு எண்ணெயுமில்லை.
ஏன்னிந்த வேதனை.
தரணியில் இருள் அகற்ற
உன்விடியலில் ஒளி தந்து
உன்னத வாழ்வு வாழ
சித்திரை பெண்ணே வருவாய்
விரைவாய் வரம் தருவாய்.
நன்றி
அதிபருக்கும் வாணி க்கும்
கௌவுரிக்கும் நகுலாவுக்கும் சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்.