: துருவத்தின் மாற்றமோ
பருவத்தின் மாற்றம்
பகல்இரவு மாறும்
பனிமழை குளிரும்
பகலவனை தேடும்
காற்றோடு மழையும்
கைநடுக்க மாகும்
கண்ணீரும் வந்து
கைக்குட்டை நாடும்
தலையிலும் தொப்பி
கழுத்திலும் துண்டு
மூடிகட்டிய போதும்
முடியலை கண்டு
உடல்நிலை சோர்வு
உறக்கமும் குறைவு
உணவிலும் நிறைவு
உருப்படியோ தளர்வு