கடந்து வந்த பாதைகளை
நடந்து வந்த நாட்களைத்
திரும்பிப் பார்க்கிறேன்
பிரமிப்பாய் பிரகாசமாய்
மென் மலர் தூவிய
மலர்ப் படுக்கையாய்
சந்தோசம் என்னுள்ளே
பூச்சொரிய
சில நாட்கள்
மங்கலாய் இருளாய்
எத்தனை மேடு பள்ளங்கள்
குண்டும் குழியுமாய்
வீழ்த்தி விட கண்ணி வைத்துக்
காத்திருக்க
மன உறுதியோடு முன்னேறி
நடந்து வந்த நாட்களிலும்
குளங்களில் தேங்கி குட்டையாய்
மாறிடுவேனோ என்ற பயத்துடன்
கழிக்கின்ற காலங்கள்
அத்தனையும் தாண்டி வரும்
ஊன்று கோலாய்
நம்பிக்கைத் தூண்களாய்
என்னுள்ளே வலம் வந்து
பலம் தந்த பாமுமே உன்னை
நன்றியோடு நினைக்கின்றேன்
உன்னோடு நானும்
என்னோடு நீயும்
இணை பிரியா திருந்திடவே
இறை வேண்டல் செய்திடுவேன்
தினம்தினம்
நன்றியோடு நினைக்கின்றேன்.
நன்றி வணக்கம்.