அனைவருக்கும் வணக்கம் 🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு — 184
தலைப்பு — எங்கள் வாழ்விலும் மங்கலம் அமங்கலம்.
எமைச் சூழ எங்கும் காற்றுண்டு
துணையாக எமக்கது தந்திடும் சுகத்தை
நினைக்காத விதத்தில் நட்டத்தை ஏற்படுத்த
பகையாகி ஒருநாள் புயலாகித் துன்புறுத்தும்.
பயிர் வளர்வதும் பொலிவுறுவதும் மழையால்
உயிர் வாழ்வதற்கு உறுதுணையாவதும் மழையே
பயன் பலதந்த பெருமைமிகு மழையொருநாள்
துயர்தரு வெள்ளத்தை தோற்றுவித்து வருத்தும்.
எங்கள் வாழ்விலும் இன்பங்கள் இணைந்திருக்கும்
மங்கலம் நிறைந்து மகிழ்வை ஏற்படுத்தும்
தங்காது நீண்டிந்த மங்கலம் எம்மோடு
அமங்கலம் உருவாகும் அவலத்தை ஏற்படுத்தும்.
நன்றி வணக்கம்🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்.
London
02/08/2022