வணக்கம் master 🙏
வணக்கம் அதிபர் 🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு — 181
தலைப்பு — அன்புள்ளம் கொண்டோரே தேவையிங்கு.
பொதுமக்கள் சேவையென்று பொய்யுடுத்து வருவர்
எமதுவாய் மகிழ்வூட்டி மாற்றுவர் வாக்குகளை
எதுக்காகப் புகுந்தாரோ அதைமறந்து செயற்பட்டு
பொதுநிதியை நீதியன்றிப் பறித்திடுவர் பேராசையொடு.
இன்று இவர்களது இரக்கமற்ற இழிசெயலால்
துன்பம் பெருகி துயர்வெள்ளம் பாய்கிறது
தன்னலமற்ற சேவையே தருவிக்கும் உயர்வுகளை
அன்புள்ளம் கொண்டோரே இன்றெமக்குத் தேவையிங்கு.
பிறந்தோர் புவியில் பெறவேண்டும் நற்பெயரை
இறந்த பின்பும் இவர்பெயர் வாழவேண்டும்
மறக்க முடியாது மக்கள் மனங்களில்
நிறைந்து இருப்போர் சுயநலமற்ற பெரியோரே.
நன்றி வணக்கம் 🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
12/07/2022