சந்தம் சிந்தும் கவிதை

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏
வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு — 180

தலைப்பு — பிரிவுத்துயர் மறைத்தாலும் மறக்கோம்.

மெழுகாய் உருகி மேதினியில் உங்கள்
பழுத்த அறிவால் பலருக்கும் உதவி
அழுத்தமாய் பெயரை அவனியில் பதித்தீர்கள்
எழுத்தால் வாழ்த்துகிறோம் ஏற்றத்தை காட்டுதற்கு.

இறக்கும்வரை இனிதே இப்புவிக்கு ஆற்றியவை
இறப்போடு மறையாது என்றும் நிலைத்திருக்கும்
மறக்கோம் பிரிவுத்துயர் மறைத்தாலும் எம்மோடு
இருக்கும் உம்பெயர் என்றென்றும் ஓவியமாய்.

உள்ளத்தில் உயர்வாய் உதித்த சிந்தனையால்
நல்லவற்றை நாளும் நம்மவர்க்கு வழங்கி
தொல்லைகள் நீங்கிட துணையாய் பணியாற்றி
நல்லநிலை பெற்றீர்கள் நற்பெயரின் பதிவோடு.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
28/06/2022