வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு – 174
தலைப்பு — கருணையுடன் உதவுபவரை
கல்வியைக் கற்கலாம் கலாநிதியாய் நிற்கலாம்
இல்லையது என்றாலும் உள்ளத்தில் கருணையுடன்
வள்ளலாய் முன்வந்து விநியோர்க்கு உதவுபவரை
எல்லோரும் போற்றுவர் ஏற்புடைய பட்டமிட்டு.
காலத்தைக் காசைக் கரைக்கும் கற்று
ஞாலத்தில் பட்டங்கள் பலவற்றைப் பெற்றாலும்
வாழக்கற்று அன்புடன் வல்லபமுடன் பண்போடு
சீலமுடன் வாழ்பவரையே சகலரும் விரும்புவர்
அடுத்தவன் பணத்தை அதிகாரத்தால் பறித்து
எடுத்தாலும் அமைதியோ ஆனந்தமோ நிறையாது
எடுப்பதால் நிம்மதி அருகில் வருவதில்லை
கொடுப்பதால் உயர்வைக் காணலாம் உலகிலே.
நன்றி வணக்கம் 🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
10/05/2022