வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு — 163
தலைப்பு — சாந்தி
நீதிக்கு மாறாய் நோக்கும் மனிதரால்
சாதியால் மதத்தால் மோதிடும் மனிதரால்
வீதிக்கு வந்து விரட்டும் மனிதரால்
பாதிக்கப் பெற்றோர் பலருண்டு இப்புவியில்.
அமைதியை இழந்து அவதியுறும் இளைஞர்கள்
சுமையென முதுமையை சுமந்திடும் முதியோர்
பகைமை தெருப்பால் பலமிழந்த பகுதியினர்
அனைவரும் வேண்டுவது அன்பைச் சாந்தியை.
பணத்தால் பலவிதப் பொருட்களை வாங்கலாம்
சினத்தால் எதிர்ப்பை சோகத்தைச் சேர்க்கலாம்
குணத்தால் நற்பெயரை கௌவரத்தை பெறலாம்
மனத்தால் சாந்தியை மேன்மையை அடையலாம்.
நன்றி வணக்கம்🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
22/02/2022