சந்தம் சிந்தும் கவிதை

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் Master 🙏
வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு -263

தலைப்பு – அழகு

அம்மா காட்டிய அன்பு அழகு

ஆத்திசூடி கற்றதால் என்தமிழ் அழகு

இயல் இசை நாடகம் அழகு

ஈகை செய்யும் கரங்கள் அழகு

உண்மையை உணர்ந்த உள்ளங்கள் அழகு

ஊனம் இல்லாத மனங்கள் அழகு

எல்லை கடந்த நட்பு அழகு

ஏக்கம் அற்ற ஊக்கம் அழகு

ஐயம் அற்ற பெண்மை அழகு

ஒற்றுமையாய் வாழும் குடும்பம் அழகு

ஓடி விளையாடும் குழந்தைகள் அழகு

ஔவையால் தமிழும் பெண்ணும் அழகு.

நன்றி வணக்கம்🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
26/04/2024