சந்தம் சிந்தும் கவிதை

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master, 🙏
வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு – 260

தலைப்பு – பணம்

அன்பு பார்த்து வந்த உறவு
முகம் பார்த்து வந்த உறவு
கல்வி தகமையால் ஒட்டிய உறவு
கஷ்டம் என்றதும் ஓடியதும் உறவுகளே.

நேர்மையை பார்த்து நெருங்காத மனிதம்
முயற்சியை ஏற்க மறுத்த மானிடம்
நம்பிக்கை என்றதும் நகைத்த மனிதர்கள்
உயர்வை பார்க்க உன்னதம் அற்றவர்கள்.

பணம் வந்ததும் நெருங்கிய உறவு
பாதாளம் வரை பணத்தால் லஞ்சம்
மரணத்தையும் பணம் கொடுத்து வாங்கும்காலம்
பத்தும் செய்யும் பணம் இதுவோ?!

நன்றி. வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
09/04/2024