சந்தம் சிந்தும் கவிதை

திருமதி திரேஸ் மரியதாஸ்

🌺பழமை🌺

பழைமையழகு பழமான தமிழ் இலக்கணம்
வழமையான வண்ணவழகு
பழம்பெரும் ஐம்பெரும் காப்பியங்கள்
காட்டிய வாழ்க்கையும் தீமைகளைக் கட்டி தீட்டிக்கூட்டிய நீட்டிய நன்மைகளும்
அன்றும் என்றும் தீர்ந்திடாதவழகு

பண்டைய குமரியின் இளமையை
பாண்டித்தியம் பெற்றவெந்தப்
பண்டிதனாலும் படித்துவிடமுடியாதவாறு
பவளங்களாயே முதிர்ந்த இலக்கண இலக்கிய
இன்னமுதங்களாய் இன்றும் இளையோடுகிறது இளையவளாய்

பழுத்தவர்களால் படித்து வடித்துக்
கொடுத்த
வாழ்க்கைப் பாடப் பள்ளிகளின்
அநுபவங்கள் ஒவ்வொன்றும்
உபநிடதங்களும் உன்ன வேதங்களும்
வேதாகமங்களுமாய்
என்றும் நின்று நெறிப்படுத்துகிறது
நிர்மலமான நறுமணமான
நெய்தல்க் கிழவியாய்
குழவிகளையும் குழலூதி அழைத்து

மூலமான இராமாயாணம் கனிந்த கனமான கம்பராமாயணம் இராம இராவணனின் இரக்கத்தையும் அரக்கத்தையும் அரங்கேற்றி
ஈரமாயே ஈர்ததுக் கோர்த்து நிற்கிறது
பார்த்து தேர்ந்து திருந்திடவே
தொன்மையான தொக்கழகாய்

பழம்பெரும் தொல்காப்பியம் திருக்குறள் எனத் தெய்வப்புதல்வர் தந்ததெல்லாமே தெவிட்டாத தேவாமிர்தமெனப்
தெளிவான பழந்தமிழர் பண்பாடு கலாச்சாரம் எனக்
குழைத்துத் தருகிறது குழையலான
ஓலைகளின் ஊடே ஒட்டுமொத்தக்
கட்டுக்களாய்ப் பழுத்தவைகளாகப்
பல்கிப்பெருகப் பலநூறு தலங்களாய்

முன்னாளின் கூட்டுக்குடும்ப
உறவுகளின் கூட்டிணைப்போ
குதூகலம் கும்மாளம் கூடவே
கூட்டான பாட்டியின் கூதலான
அம்மானை பள்ளு சிந்து தெம்மாங்கு ஒப்பாரியென ஒவ்வொன்றிலும் சமூகத்திற்கான அறிவுரையைக் கள்ளாய்க் கலந்து பருக்கிய தெள்ளமுது
தாலாட்டு உழுவத்தொழில் எனப்
பழம்பெரும் கதைகள் பாக்கள்
நாளானாலும் நல்லமுத கீதங்களே
மெய்யாய்

முன்னையவெல்லாம் முகிழ்ந்து
முனைப்பாய்ப் பாய்விரிப்பதால்
புதிதாய் பூவுலகில் மூவாயிரங்கோடி
இணையத்தளங்கள் இணைந்தாலும்
ஈடிணையற்ற முன்புள்ள முத்துக்கள்
பின்புள்ள சொத்துக்களாய்ச்
சுகம்தரே முடியாது பிடித்தீர்த்து