சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்-223 – 23.05.2023
பதினெட்டு வைகாசி முள்ளிவாய்க்கால்
பல்லுயிரை பலிகொண்ட விசவாய்க்கால்
சதிசெய்து தமிழினத்தை அழித்தநாள்
சந்ததியே இல்லாமல் ஒழித்தநாள்
விதியாகி வெடிமருந்தில் சிதறிடவே
விலையாக உயிர்களும் இறைந்தனவே
கதியற்று கருமருந்தால் பொசிந்திடவே
கனப்பொழுதில் கரியாக்கி குவித்திடவே
இதிகாச வரலாற்றில் இதுவோர்
இனஅழிப்பு தினமாக பதிவிட்டோர்
நதியாகி குருதியும் ஓடியதே
நயவஞ்சர் வெற்றிகோசம் பாடியதே
பதியிழந்த மனைவிகளாய் பலருண்டு
பட்டமர வாழ்ககையாய் பாவியுண்டு /
அபிராமி (கவிதன் )