03.10.24
ஆக்கம் 332
திசை காட்டிகள்
திசை காட்டியின் தீராத
தாகம்
திக்குத் தெரியாத சிறுவரைப் பள்ளியில்
பக்குவமாய்ச் சேர்த்து
பாரமெடுத்த பாகம்
ஊக்கமுடன் விழி மேல்
விழி வைத்து தூக்கம்
இன்றிய வேகம்
தாழ்வு மனப்பான்மை
நீக்கி வசதியின்மை
போக்கி வாழ்வின்
சோகம் மறைக்க
வேறு திசை திருப்பிய
தாகம்
சக்தியினால் புத்தகம்
வாசித்திடு
புத்தியினால் சித்தி
அடையத் தேடலில்
விளைச்சலிட்டு
உயர்ந்திடென
ஊட்டிய வழிகாட்டிகள்
சுயமரியாதையுடன்
தைரியமாய் உழைத்து
வாழ்வில் ஊன்றிட
நின்றிட்ட திசைகாட்டி
தெய்வங்களே எத்திசை
இருப்பினும் பாதந் தொட்டு போற்றிப்
புகழ் மாலை போட்டிடுவோமே.
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து