வியாழன் கவிதை

தன்னம்பிக்கை

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-47
30-01-2025

தன்னம்பிக்கை

பேரிடி வந்து போயிடலாம்
பெரும் சோதனை தரும் சாதனையே
தன்னம்பிக்கை கொண்டவர் பலரிங்கே
தரணியை ஆளுவர் கேளு புள்ள..

விதியும் சதியும் வீழ்த்திடலாம்
வீணாய் காலத்தை அழித்திடதே
விலைவாசி கூடியிருந்தாலும்
வீண் தொலைபேசியற்று வாழ்கின்றோமா?

மரத்தில் ஏறி பழம் பறிக்க
மலை மேடு பள்ளம் பார்க்கலாமா
முடங்கிடாமல் முன்னேற பல
மூதுரை சொல்கிறேன் கேளு புள்ள…

தன்னம்பிக்கை விதையை விதைத்திடு
தாழ்வு மனப்பான்மை இருளை ஒழித்திடு
பயமெனும் பேய்தனை அடித்தெறிந்திடு
இலக்கினை நோக்கி அடியெடுத்திடு

தோல்வியை திருப்தியாய் வரவேற்றிடு
திட்டமிட்டு இலக்கை நகர்த்திச் சென்றிடு
தோல்வி கண்டு மனம் துவண்டு விடாதே
வெற்றிப்பயணம் உன் கையில் புரிந்திடு!

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.