தடமது பதித்தெழும்
தனித்துவம்…!
மூ ஒன்பது அகவையாம்
எம் முதல் ஒலி கலையகம்
மூத்த மொழி வளர்த்திடவே
தடம்பதித்த நிலை அகம்
மூலை முடுக்கெங்கும் தன்
புகழ் பரப்பித் தான் நிற்க
முந்தி வந்து தாள் பணிந்தோம்..!
படைப்பின் சக்தி விரிந்திடப்
படைப்போர் கூடமே இதுவாம்
இறுமாந்து தான் நிற்கிறோம்
எத்தனை வளர்ச்சி உந்தனுக்கு
கல்லையும் நீ கலையாக்கி
கனிந்தே எனையும் ஆளாக்கி
அடுத்த தலைமுறை வேரோட
எடுத்த அவதாரம் எத்தனையோ…!
பிரமன் படைப்பின் விந்தை
பிறக்கும் மனிதரே சிந்தை
கூர் தீட்டி நீயும் சீராக்கினாய்
குவலயத்தில் பேரை நீ தாங்கினாய்
முதல் ஒலி கலையகமாய்
சூரிய சந்திர உதயமுமாய்
பாமுகமாய்ப் பாரொளிர்ந்தாய்
பல முகத்தை அறிமுகமாக்கினாய்…!
பலன் கருதாப் பலசாலி நீ
பலம் கொழிக்கும் சிரசாகினாய்
உலகினிலே வலம் வந்தேகினாய்
உறவுகளாய் எமைத் தாங்கினாய்
உயிர் நாடி மொழி என்றாய்
உயிர்ப்புள்ள படைப்பாய் ஆக்கினாய்
உன்னால் நானும் ஆளாகினேன்
எழுத்தால் என்னை சீராக்கினேன்
ஏழ்மை நீங்கி வாழ்வேகினேன்…!
சிவதர்சனி இராகவன்
6/6/2024