அதி காலை வேளையிலே
அன்பெனும் பாதையிலே
ஆன்மீகப் பாலத்தில்
வழி நடக்க இறை சிந்தனை
பண்ணோடு இசை பாடும்
மும்மத பண்ணிசைகள்
பொதுச் சிந்தனைகள்
பொறியான சொற்கள்
ஊரோடு விளையாடி
சொல்தேடலும்
அறிவுக் களஞ்சியமும்
கேள்விச் சரங்களால்
கணை தொடுக்க
விழிப்புத் தகவலுடன்,
தமிழால் ஒன்றிணைய
கற்றிடும் பன்மொழிகள்
குவலயத்தில் குடும்பச்
சிக்கல் தீர,, வலிகளை
ஆற்றுப்படுத்த மருத்துவ நேரம்
மரபுச்சொல் கவிதை
வியாழன் கவிதைகளும்
முற்றத்து மலராய் பயனும் பகிர்வுமாய்
உலகச் செய்திகள்
நாட்டு நடப்புக்கள்
மகரந்தச் சிதறல்களாய்
அடுத்த தலை முறைக்காய்
இளையோர் ஆக்கங்கள்
தேடல்கள் அறிவுரைகள்
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
சாதி மத பேதமின்றி
சமத்துவம் படைத்ததால்
சரித்திரமாகின்றாய்
நீ ஓர் சரணாலயம்
சாதனைகள் பல புரிந்து
பாரெல்லாம் ஒளி வீசும் பாமுகமே
அகவை இரு பத்து ஒன்றில்
தடம் பதித்திடும் மகத்துவம் நீ
காலத்தால் அழியாத பொற் சுவடு
மேலும் வளர்ந்திட வாழ்த்துகின்றோம்.
நன்றி வணக்கம்