வியாழன் கவிதை

தடமது படைத்தெழும் தனித்துவம்

ஜெயா நடேசன்

வியாழன் கவிதை நேரம்
10.06.24
கவி இலக்கம்-
“தடமது படைத்தெழும்
தனித்துவம்”
புலம்பெயர் வாழ்வில்
எம் தமிழ் உறவுகள்
பன்னாட்டு நாடுகளில்
வாழும் நிலையினிலே
தடமது படைத்தெழும்
தனித்துவம் படைத்த
புதுமையாக பூத்து மணம் பரப்பும்
ஐரோப்பாவின் லண்டன் தமிழ் வானொலி வாழியவே
அடுத்த தலைமுறை நோக்கிய பயணத்தில்
அன்புள்ளம் கொண்ட
இதயங்கள் இளையோர் பெரியோர்
இனிதே இணைந்தே சிறப்பிப்பதும்
பொங்கும் தமிழாக பாரெங்கும் பரப்பி
மணம் பரப்புகின்றாய்
பல நூறு உறவுகளின் சங்கம்மாய் தடம் பதித்துள்ளாய்
விண்ணை முட்டும் அறிவை பெற்றிட
விளங்கும் நல்ல இணையம் நீ
எங்கள் பைந்தமிழ் வளர்க்க
ஆண்டுகள் பல கடந்து வந்து தடம் பதித்தாய்
நீண்ட உன் பயணம் தன்னிலே
நேர்மையாய் உழைத்து தனித்துவமாய்
உயர்ந்து நிற்கிறாய்
மக்களின் மனதினிலே நிறைந்து
அற்புத இணையம் நீ
மாட்சிமையோடு உனை தனித்துவமாய் உருவாக்கினாய்
பொங்கும் தமிழாக இன்பத் தமிழை
நித்தமும் எங்கும் உன் ஒளியே
எண்ணக் கருவை தாண்டியே
கண்ணென கருத்துக்களை பல தருவாய்
மாட்சிமையோடு தடமது
பதித்து ஓங்கி நிற்கிறாய்
இயக்குனர் தொகுப்பாளர் படைப்பாளர்
இன்பம் பொங்க சேவை தொடர வாழ்த்தும் நானும்
ஜெயா நடேசன்