சந்தம் சிந்தும் கவிதை

ஜெயா நடேசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-29.08.2023
இலக்கம்-228
தலையீடு
—————
தேவையற்ற விடயங்களில்
தலையீடு செய்து
குழப்பி விட்டு
வேடிக்கை பார்ப்பதில் பலர்
குடும்பங்களிலே தலையிட்டு கணவன் மனைவி பிணக்குகளை ஏற்படுத்தி
பிரித்து வைப்பதில் மும்மரமாக சிலர்
பள்ளி பிள்ளைகள் விடயத்தில் தேவையற்ற தலையீடுகள்
கல்வி பாதிப்பு அடைவதில் பெற்றோர்
காதலர்கள் இடையில் பிரிவுகளை ஏற்படுத்தி பிரித்து வைப்பதில் நண்பர்
இன பேறுபாடு ஏற்பட தேவையற்ற தலையீட்டில் அரசாங்க தலைவர் ஒரு சிலர்
ஜெயா நடேசன் ஜேர்மனி