சந்தம் சிந்தும் கவிதை

ஜெயா நடேசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு நேரம்-19.12.2023
கவி இலக்கம்-246
நிலாவின உலா
—————-
வெள்ளி நிலாவே
உன் அழகுதான் என்னே. கவிஞர்கள் கற்பனையில் பெண்களை
அழகுற ஒப்பிட்டு. உலகிற்கு கவி படிக்கிறார்களே. உன்னை நினைத்து. மங்கையர்களும் மனதார காதலாகி கசிந்து உருகி உருகி. கனவு காண்கிறார்களே. அண்ட வெளியின் அரசியே. அழகாய் நீ அண்ட வெளியில் அப்பளமாய். அந்த மாலையில் காட்சி தருவாயே
அம்மா உன்னை கண்ணாடியில் காட்டி அமுது ஊட்டினை மறக்க முடியுமா. காதலர் பலர் கடற்கரையில். கண்டு கவிதை வடித்து. அழகு படுத்தியதை.
பாலன் ஜேசு பிறந்த இடம் இடையர்களுக்கு வழி காட்டி
கூட்டி சென்றதை மறக்க முடியுமா
விண்வெளி விஞ்ஞானிகளை வரவளைத்து
உன்னை உலகத்திற்கே
முத்திரை பதித்ததை மறக்க முடியுமா
உன்னை எட்டி பிடித்து விளையாட நினைத்து நினைத்து எனக்கும் வயதாகி போகுதே
நீ அங்கே இரு இந்த நாட்டில் உன்னைப் பார்த்து
மகிழ ஒளிந்து விட்டாய்
ஜெயா நடேசன் ஜேர்மனி